உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வேல்ஸ் எப்.சி.,யின் கால்பந்து; விஜய் பிரண்ட்ஸ் சாம்பியன்

வேல்ஸ் எப்.சி.,யின் கால்பந்து; விஜய் பிரண்ட்ஸ் சாம்பியன்

சென்னை:வேல்ஸ் கால்பந்து கிளப் சார்பில், வேல்ஸ் எப்.சி., நாக் அவுட் கால்பந்து போட்டியானது, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் சமீபத்தில் நடந்தது.கிளப், அகாடமி என மொத்தம் 16 அணிகளில், 160க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர். அனைத்து போட்டிகள் முடிவில், விஜய் பிரண்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடர்ந்து, பிளாக் மாம்பாஸ் அணி இரண்டாம் இடத்தை கைப்பற்றியது.மேலும், போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோல்கீப்பர் மற்றும் சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, வேல்ஸ் பல்கலையின் வேந்தர் ஐசரி கணேஷ் ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி