மேலும் செய்திகள்
ஓ.எம்.ஆரில் பல்நோக்கு மைய கட்டடம் திறப்பு
2 minutes ago
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், தி.மு.க., ஆட்சி முடிவதற்குள் சிற்றுந்துகள் இயக்கம் முடங்கி வருவது, மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுதும், 1999ம் ஆண்டு, நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு,'மினி பஸ்' எனும் சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. அதன் பின், கடந்த சில ஆண்டுகளாக, கிராமங்களுக்கு இயக்கப்பட்ட சிற்றுந்துகள் நிறுத்தப்பட்டன. இதனால், பல்வேறு தரப்பினரும் கடும் சிரமப்பட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால், கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்துடன், செங்கல்பட்டு மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு, ஷேர் ஆட்டோக்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. இந் த ஷேர் ஆட்டோக்களில், சட்ட விதிகளுக்கு புறம்பாக, 10க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் செல்கின்றனர். இப்படி செல்லும் ஆட்டோக்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி, பலர் படுகாயமடைகி ன்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதையடுத்து, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய சிற்றுந்து திட்டம் குறித்து, தமிழக அரசிதழில் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இழப்பு
இதையடுத்து, 50 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கு ம் புதிய திட்டத்திற்கு, தமிழக அரசு கடந்த ஜன., 24ம் தேதி அனுமதி அளித்தது. சிற்றுந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெற, விண்ணப்பிக்கும்படி, மாவட்ட அரசிதழில் கடந்த பிப்., 12ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. செங்கல்பட்டு, தாம்பரம், சோழிங்கநல்லுார் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட, 51 வழித்தடங்களுக்கு, அப்போதைய கலெக்டர் அருண்ராஜ், கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி அனுமதி அளித்தார். இதில், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 33, தாம்பரம் வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 11, சோழிங்கநல்லுார் வட்டார போக்கு வரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 7, என, மொத்தம் 51 சிற்றுந்துகள் துவக்கத்தில் இ யக்கப் பட்டன. இந்நிலையில், நகர பகுதிகளிலிருந்து, கிராமப்புறங்களுக்கு ஷேர் ஆட்டோக்கள் அதிகமாக இயக்கப்படுவதால், சிற்றுந்துகளுக்கு வருமானம் இல்லாததால், 25க்கும் மேற்பட்ட சிற்றுந்துகள் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற பேருந்துகள் இயக்கப் பட்டு வருகின்றன. சிற்றுந்து இயக்கும் உரிமையாளர்களுக்கு தினமும் 2,000 ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஷேர் ஆட்டோக்களில் ஒரு நபருக்கு, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், சிற்றுந்தில் 20 கி.மீ., வரை ஒரு நபருக்கு, 15 ரூபாய் வரை மட்டுமே வசூலிக்கப்படுகிறது. முழுமையான சேவை
இதனால், சிற்றுந்துகள் கட்டணத்தை உயர்த்தினால், மக்களுக்கு முழுமையான சேவை வழங்க முடியும் என, சிற்றுந்து உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்களுக்காக கொண்டுவரப்பட்ட சிற்றுந்துகள் திட்டம், தி.மு.க., ஆட்சி முடிவதற்குள் படிப்படியாக மூடுவிழா நடத்துவது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராமங்களை இணைக்கும் வகையில், தொடர்ந்து சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. கிராமங்களுக்கு சிற்றுந்துகள் இயக்குவதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மருத்துவமனை செல்வோருக்கு வசதியாக உள்ளது. ஆனால், சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை. காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் இயக்கப்படும் நிலையில், மற்ற நேரங்களில் சிற்றுந்துகள் இயக்காததால் சிரமம் ஏற்படுகிறது. தினமும், குறித்த நேரத்தில் சிற்றுந்துகள் இயக்க வேண்டும். அரசு குறிப்பிட்டுள்ள நேரங்களில் இயக்க வேண்டும். - க.செந்தமிழ்செல்வி, குண்ணவாக்கம்.
சிற்றுந்து உரிமையாளர்கள் கூறியதாவது: கிராமப்புற மக்களுக்காக சிற்றுந்துகள் இயக்குவது மகிழ்ச்சியாகத் தான் உள்ளது. இதில் வரும் வருமானத்தில் ஓட்டுநர், நடத்துநருக்கு சம்பளம் மட்டுமே கொடுக்க முடிகிறது. தினமும் 2,000 ரூபாய்க்கு டீசல் போடுவதால், போதிய வருமானம் இல்லாமல் நஷ்டம் ஏற்படுகிறது. சிற்றுந்து கட்டணத்தை உயர்த்தி அரசு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
2 minutes ago