உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மொபைல் போன் பறிப்பு நால்வர் கைது

மொபைல் போன் பறிப்பு நால்வர் கைது

சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த மழுவங்கரணை, தேரடி தெருவை சேர்ந்தவர் நாராயணன், 45. நேற்று முன்தினம் காலை, அவர் வயலுக்கு சென்றபோது அவ்வழியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், நாராயணனை மிரட்டி, அவரிடம் இருந்த மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பினர்.இதுகுறித்து, நாராயணன் சித்தாமூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி விசாரித்த போலீசார், மழுவங்கரணையை சேர்ந்த வசந்த், 21, கிஷோர், 18, கீழ்மருவத்துாரை சேர்ந்த சசிதரன், 18, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.மூவரை மதுராந்தகம் சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன், செங்கல்பட்டு சிறார் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை