மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி
03-Sep-2024
மாமல்லபுரம்:செங்கல்பட்டு பகுதியிலிருந்து, மாமல்லபுரம் நோக்கி, காரில் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக, நேற்று முன்தினம் இரவு, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, தனிப்படை மற்றும் மாமல்லபுரம் போலீசார் இணைந்து, மாமல்லபுரம் அடுத்த எச்சூர் பகுதியில், இரவு 10:30 மணிக்கு கடந்த ஹுண்டாய் க்ரெடாய் காரை வழிமறித்து சோதித்தனர்.காரில், 15,000 ஹான்ஸ் பாக்கெட்டுகள் அடங்கிய 20 மூட்டைகள், 15,600 விமல் பாக்கு பாக்கெட்டுகள் அடங்கிய 10 மூட்டைகள், 17 ஆயிரத்து 160 புகையிலை பாக்கெட்டுகள் அடங்கிய 11 மூட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகளில் விற்க, பெங்களூருவிலிருந்து கடத்தி வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மாமல்லபுரம் போலீசில், நேற்று அவை ஒப்படைக்கப்பட்டன.போலீசார் வழக்குப்பதிந்து, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹரசன்குமார், 22, ஜீவாராம், 20, பேராராம், 37, கிமாராம், 22, ஆகியோரை கைது செய்தனர். 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள், கார், நான்கு கைபேசிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
03-Sep-2024