மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
1 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
2 hour(s) ago
காலி மனையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
2 hour(s) ago
கல்பாக்கம்,:சென்னை அணுமின் நிலையம், அதன் சமூக பொறுப்பு திட்டத்தில், கல்பாக்கம் பல்நோக்கு கூடத்தில், இலவச கண் பரிசோதனை, கண்புரை அறுவை சிகிச்சை முகாம், நேற்று துவக்கப்பட்டது. இதில், சுற்றுப்புற பகுதியினருக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்து, 300 பேருக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை அளித்து, மருந்து வழங்கி வருகிறது. பார்வை குறைபாடுள்ள 2,000 பேருக்கு, இலவச மூக்கு கண்ணாடி வழங்குகிறது.இந்த சிகிச்சையை, 42 லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்த, சென்னை, சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையை, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நியமித்துள்ளது.அணுமின் நிலைய இயக்குனர் சுதிர் பி. ஷெல்கே நேற்று முகாமை துவக்கி, மருத்துவமனை நிர்வாகத்திடம் திட்ட நிதியை வழங்கினார். மனிதவள மேலாளர் வாசுதேவன், சமூக பொறுப்பு குழு நிர்வாகிகள் சுபா மூர்த்தி, ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வரும் 28ம் தேதி வரை, தினமும் காலை 8:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை கண் பார்வை மற்றும் கண்புரை பரிசோதிக்கப்படுகிறது.கண்புரை கண்டறியப்பட்டவர்களுக்கு, வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை, நடமாடும் அறுவை அரங்கில் அறுவை சிகிச்சை அளிக்கப்படும்.கண் பரிசோதனைக்கு செல்பவர்கள் ஆதார் அட்டை, பிற நோய்களுக்காக அவர்கள் உட்கொள்ளும் மருந்து மற்றும் மாத்திரைகள் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். அறுவை சிகிச்சை முடிந்து, இரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பலாம்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago