உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அடிக்கடி மின்தடை பிரச்னை கருமாரப்பாக்கம் கிராமத்தினர் தவிப்பு

அடிக்கடி மின்தடை பிரச்னை கருமாரப்பாக்கம் கிராமத்தினர் தவிப்பு

திருக்கழுக்குன்றம்:அடிக்கடி ஏற்படும் மின்தடையால், கருமாரப்பாக்கம் கிராமத்தினர் தவித்து வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகா, கருமாரப்பாக்கம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பெரும்பான்மை விவசாயம் சார்ந்த பகுதியான இங்கு, கடந்த சில நாட்களாக, அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.மேலும், பள்ளி நேரத்தில் காலையில் மின்தடை ஏற்படும் போது, மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதில் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவதால், துாக்கமின்றி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், குடிநீர் வினியோகம் செய்தல் பணியும் பாதிக்கப்படுகிறது.மின் பழுதை சரி செய்ய, மின்வாரிய ஊழியர்களை மொபைல் போனில் அழைத்தால், அவர்கள் அழைப்பை ஏற்பதில்லை. அழைப்பை ஏற்றாலும், முறையான பதில் கூறுவதில்லை என, பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் கவனித்து, கருமாரப்பாக்கம் பகுதிக்கு தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ