உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை ரயில் நிலைய சாலையில் குப்பை கொட்டுவதால் சீர்கேடு

செங்கை ரயில் நிலைய சாலையில் குப்பை கொட்டுவதால் சீர்கேடு

மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த மேலைமையூர் ஊராட்சி, ராமகிருஷ்ணா நகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து, செங்கல்பட்டு ரயில் நிலையம் செல்லும் சாலை உள்ளது.இந்த சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் ரயில் நிலையம் சென்று வருகின்றனர். சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் குப்பையை ரயில் நிலையம் செல்லும் சாலையோரம் கொட்டுவதால், இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.இது குறித்து, ரயில் பயணியர் கூறியதாவது:தினமும் மக்கள் அதிகளவில் சென்று வரும் பகுதியில், குப்பை கொட்டப்பட்டு உள்ளது. இதை குப்பையை பன்றிகள் கிளறுவதால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த பகுதியில் குப்பையை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை