உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாதியில் நிற்கும் கால்வாய் பணி

பாதியில் நிற்கும் கால்வாய் பணி

தாம்பரம்:தாம்பரம் - வேளச்சேரி சாலை, ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் இருந்து பிரிந்து செல்கிறது, மாடம்பாக்கம் சாலை.வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையை இணைப்பதால், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டிப்பர், ஜல்லி லோடு லாரிகள், வேன், கார் என, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.முக்கியமான சாலையில், ராஜகீழ்ப்பாக்கம் சிக்னலில் இருந்து கோழிப்பண்ணை பேருந்து நிறுத்தம் வரை, சாலை விரிவாக்கம் செய்யும் பணியும், மழைநீர் கால்வாய் கட்டும் பணியும் நடந்து வருகிறது.மழைநீர் கால்வாயை பொறுத்தவரை தொடர்ச்சியாக செய்யவில்லை. கோழிப்பண்ணை நிறுத்தம் அருகே சில அடி துாரத்திற்கு பள்ளம் தோண்டி, அப்படியே விட்டுவிட்டனர். இதனால், மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு, விடுபட்ட இடங்களில் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, ராஜகீழ்ப்பாக்கம் பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை