உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடையில் கைவரிசை போதை நபருக்கு காப்பு

கடையில் கைவரிசை போதை நபருக்கு காப்பு

சூணாம்பேடு:சூணாம்பேடு பஜார் பகுதியைச் சேர்ந்தவர் லதா 45. கடந்த 20 ஆண்டுகளாக வீட்டருகே கடை டீக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டில் துாங்கியுள்ளார்.இரவு கடையில் சத்தம் கேட்டதால், லதா எழுந்து வந்து பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் டீக்கடை கல்லாவில் இருந்த 1,200 ரூபாயை திருடிக்கொண்டு தப்பியோடினார்.இதுகுறித்து லதா, சூணாம்பேடு காவல் நிலையத்தில் தகவல் புகார் அளித்தார். இதையடுத்து, தப்பியோடிய மர்மநபரை பிடித்து விசாரித்ததில், மயிலாடுதுறையை சேர்ந்த சிராஜூதின், 25, என்பது தெரியவந்தது. இவர், மதுபோதையில் திருடியதும் தெரியவந்தது.சூணாம்பேடு போலீசார் சிராஜூதினை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி