உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு அவசியம்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலை சந்திப்பில் உயர் கோபுர மின்விளக்கு அவசியம்: வாகன ஓட்டிகள் கோரிக்கை

சித்தாமூர்;கயப்பாக்கம் சாலை சந்திப்பில், இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் அவதிப்படுவதால், உயர் கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தாமூர் அடுத்த கயப்பாக்கத்தில் அச்சிறுப்பாக்கம் - போந்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையில், சின்ன கயப்பாக்கம் மற்றும் பெரியகயப்பாக்கம் ஆகிய கிராமத்திற்குச் செல்லும் இரண்டு சாலையின் முக்கிய சந்திப்பு உள்ளது. கோட்டை புஞ்சை, பேட்டை, சின்னகயப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள், இந்த சாலை சந்திப்பை பயன்படுத்துகின்றனர். இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்து, லாரி என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை சந்திப்பை கடந்து செல்கின்றன. பல ஆண்டுகளாக, இந்த சாலை சந்திப்பில் போதிய வெளிச்சம் இல்லாமல், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே, இந்த சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !