உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பதுக்கல் மது விற்றவர் கைது

பதுக்கல் மது விற்றவர் கைது

திருப்போரூர்:திருப்போருர் அடுத்த மேல்கனகம்பட்டு கிராமத்தில், கள்ளத்தனமாக வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக, செங்கல்பட்டு சப் - கலெக்டருக்கு புகார் வந்தது.புகாரின் அடிப்படையில், செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயணசர்மா தலைமையில், அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில், அப்பகுதியில் உள்ள குமார், 45, என்பவரின் வீட்டில் ஆய்வு செய்தனர்.அப்போது, வீட்டில் கள்ளத்தனமாக மதுபாட்டில் பதுக்கிவைத்து, கூடுதல் விலைக்கு விற்கப்படுவது தெரிந்தது.பின், மானாமதி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, மேற்கண்ட நபர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்து, 21 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை