மேலும் செய்திகள்
பூட்டிய வீட்டில் 5 சவரன் திருட்டு
29-Jan-2025
பவுஞ்சூர்,பவுஞ்சூர் அடுத்த தாதங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 38. இவரது தந்தை டில்லிராஜா உடல்நலக்குறைவால் உள்நோயாளியாக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக, கடந்த டிச., 6ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு சென்னை சென்றார்.தந்தைக்கு சிகிச்சை முடிந்து, நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 1 லட்சம் ரூபாய், 10 கிராம் தங்க நகை மற்றும் பித்தளை பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.இதுகுறித்து, அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். சதுரங்கப்பட்டினம்
சதுரங்கப்பட்டினத்தைச் சேர்ந்தவர் குணாளன், 33. கடந்த 25ம் தேதி மாலை வீட்டை பூட்டிக் கொண்டு, குடும்பத்துடன் திருச்செந்துார் கோவிலுக்குச் சென்றார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் வைத்திருந்த எட்டு சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து, சதுரங்கப்பட்டினம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, திருடர்களை தேடி வருகின்றனர். சிங்கபெருமாள் கோவில்
சிங்கபெருமாள் கோவில் அடுத்த பெரிய விஞ்சியம்பாக்கம் ஈஸ்வரி நகரைச் சேர்ந்தவர் ஹரிப்ரியா,24. தனியார் பள்ளி ஆசிரியை.நேற்று காலை இவர், வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்றார்.மீண்டும், மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகை திருடப்பட்டது தெரிந்தது.தகவலறிந்து வந்த மறைமலைநகர் போலீசார் நடத்திய விசாரணையில், கதவு பூட்டை கள்ளச்சாவி வாயிலாக திறந்த மர்ம நபர்கள், நகையை திருடிவிட்டு, மீண்டும் வீட்டை பூட்டிச் சென்றது தெரிந்தது. போலீசார் மர்ம நபர்களை தேடுகின்றனர்.
29-Jan-2025