மேலும் செய்திகள்
அரசு பள்ளி பாழடைந்த கட்டடம் இடித்து அகற்ற வேண்டுகோள்
2 hour(s) ago
அரசு பள்ளிகளில் பராமரிப்பு ரூ.6.50 கோடி ஒதுக்கீடு
2 hour(s) ago
ரேஷன் கடைகள் கட்ட ரூ.43 லட்சம்
2 hour(s) ago
கூவத்துார்:செய்யூர் வட்டம், கடலுார்குப்பம் முதல் ஆலம்பரைகுப்பம் வரை, 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள், படகு வாயிலாக கடலுக்கு சென்று மீன்பிடித்தல் மற்றும் அதை சார்ந்த தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலிக்குப்பம் கிராமத்தில், 437க்கும் மேற்பட்ட மீனவர்கள், 50 பைபர் படகுகள் வாயிலாக மீன்பிடித்து வருகின்றனர்.கடல் அரிப்பை தடுக்க நேர்கல் அமைக்க வேண்டும் எனவும், மீன்வலை பின்னும் கூடம் அமைக்கக் கோரி, அப்பகுதி வாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.இதை தொடர்ந்து, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நபார்டு ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில், 5 நேர்கல், மீன் வலை பின்னும் கூடம், மீன் உலர்கலம் மற்றும் கழிப்பறைகள் அமைக்க, கடந்தாண்டு பணிகள் துவக்கப்பட்டன.கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதன் வாயிலாக கடல் அரிப்பு தடுக்கப்படும். மேலும், மீனவர்களின் படகுகள் பாதுகாக்கப்படும், மீனவ மக்களின் பொருளாதாரம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதில், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை நல அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago