மேலும் செய்திகள்
100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்காத அவலம்
06-Nov-2024
செய்யூர்:செய்யூர் அருகே உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சியில், துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர், மின் மோட்டார் ஆப்பரேட்டர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், டெங்கு நோய் தடுப்பு பணியாளர் மற்றும் தெரு விளக்கு பராமரிப்பாளர் என, 124 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 10ம் தேதிக்குள் பேரூராட்சி சார்பாக சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த மாதம் தற்போது வரை சம்பளம் வழங்கப்படவில்லை என, பேரூராட்சி ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத பேரூராட்சி ஊழியர் ஒருவர் கூறியதாவது:இடைக்கழிநாடு பேரூராட்சியில், 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு மாதமும், 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம்.சில மாதங்களாக தாமதமாக சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த மாதம், தற்போது வரை சம்பளம் வழங்கப்படவில்லை.துப்புரவு பணியாளராக பணி புரியும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினர், தாமதமாக சம்பளம் வழங்கப்படுவதால், வங்கி கடன்களை செலுத்தவும், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் முடியாமல் அவதிப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், பேரூராட்சி ஊழியர்களுக்கு விரைந்து சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
06-Nov-2024