உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போதையில் மீன் பிடித்தவர் ஏரி நீரில் மூழ்கி உயிரிழப்பு

போதையில் மீன் பிடித்தவர் ஏரி நீரில் மூழ்கி உயிரிழப்பு

கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காரனை புதுச்சேரி ஊராட்சி, செங்கழனி அம்மன் கோவில் தெரு கோகுலம் காலனியில் வசித்து வந்தவர் சதீஷ், 30; இவர், கடந்த 14ம் தேதி, மாலை 5.00 மணி அளவில் காரனை புதுச்சேரி ரோடு, காட்டூர் பகுதியில் உள்ள ஏரியில் தண்ணீர் செல்லும் மதகு பகுதியில், துாண்டிலை பயன்படுத்தி, நண்பர்களுடன், மீன் பிடித்துக் கொண்டு இருந்தார்.அப்போது சதீஷ் குடிபோதையில் இருந்துள்ளார். திடீரென நிலைதடுமாறி, சகதியான பகுதியில் தவறி விழுந்துள்ளார். இதை தொடர்ந்து அவர்கள் நண்பர்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் அங்கு சென்று பார்வையிட்ட போது, ஏரி கலங்கள் பகுதியில் சகதியாகவும், ஆகாயத்தாமரை சூழ்ந்திருந்ததாலும் அவரை மீட்க முடியவில்லை.அதை தொடர்ந்து, மறைமலைநகரில் உள்ள தீயணைப்பு துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போதும் கிடைக்காததால் இரவு நேரமாகிவிட்டதால், சகதியாக இருந்ததால் அவர்கள் திரும்பி சென்று விட்டனர். இந்நிலையில் 15ம் தேதி கலையில் தீயணைப்பு துறையினர் மீண்டும் தேடுதலில் ஈடுபட்டனர்.தீயணைப்பு துறையினர், சதீஷ் உடலை மீட்டனர். கூடுவாஞ்சேரி போலீசார், உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ