உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விடுதியில் பெண் மர்ம மரணம் கள்ளக்காதலனிடம் விசாரணை

விடுதியில் பெண் மர்ம மரணம் கள்ளக்காதலனிடம் விசாரணை

மாமல்லபுரம்:மாமல்லபுரம் தனியார் விடுதியில், பெண் துாக்கிட்ட நிலையில் இறந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.பவுஞ்சூர் அடுத்த தர்மாபுரத்தைச் சேர்ந்தவர் சுதந்திரம் என்பவரது மனைவி சங்கீதா, 32. தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், ஐந்து ஆண்டுகளுக்கு முன், சுதந்திரம் பிரிந்து சென்றுள்ளார்.இதையடுத்து சங்கீதா, கூடுவாஞ்சேரியில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்துள்ளார்.இந்நிலையில், பவுஞ்சூர் அடுத்த சுக்கிலவாடியைச் சேர்ந்த, ஏற்கனவே திருமணமான ஜெயராஜ், 28, என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர்.நேற்று, மாமல்லபுரத்திலுள்ள தனியார் விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கி, உல்லாசமாக இருந்துள்ளனர்.மாலை 3:00 மணியளவில், கள்ளக்காதலன் ஜெயராஜ் வெளியே சென்றுவிட்டு, மீண்டும் அறைக்கு திரும்பிய போது, சங்கீதா மின்விசிறியில் துப்பட்டாவால் துாக்கிட்டு, இறந்து தொங்கியுள்ளார்.இதுகுறித்து விடுதி ஊழியர்கள், மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சங்கீதாவின் உடலை கைப்பற்றிய போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கள்ளக்காதலன் ஜெயராஜிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ