வேடந்தாங்கல் குடிநீர் கிணற்றுக்கு இரும்பு வலையில் மூடி அமைப்பு
மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு, வேடந்தாங்கல் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில், சித்தாத்துார், விநாயகநல்லுார், துறையூர் உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன.வேடந்தாங்கல் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றி, குடிநீர் குழாய்கள் வாயிலாக, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக, கூடுதலாக, ஊராட்சி அலுவலக கட்டடம் அருகே, 15வது நிதி குழுவின் கீழ், 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக குடிநீர் கிணறு வெட்டப்பட்டது.தற்போது, 15வது நிதி குழுவின் கீழ், 3.60 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிநீர் கிணற்றின் மீது இரும்பு வலை அமைப்பு, கிணறு ஆழப்படுத்துதல் மற்றும் நீர் ஏற்றும் மோட்டார் அறை ஆகியவை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.