உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜாக்டோ ஜியோ அமைப்பினர் செங்கல்பட்டில் சாலை மறியல்

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் செங்கல்பட்டில் சாலை மறியல்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடந்தது.பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; ஊழியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.பல்வேறு துறைகளில் உள்ள 30 சதவீதம் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை பணியாளர்களின், 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும்.உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளில், தனியார் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர்.எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, எங்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்த முதல்வர் ஸ்டாலின், முதல்வரான பின், ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை கூட நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டினார்.இந்த போராட்டத்தில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சாலை மறியலில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டு, அருகில் உள்ள நகராட்சி திருமண மண்டபம் மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, பின் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை