மேலும் செய்திகள்
செங்கல்பட்டு அருகே பழமையான சிலைகள் கண்டெடுப்பு
6 hour(s) ago
மாமல்லபுரத்தில் களைகட்டிய சுற்றுலா
6 hour(s) ago
காஞ்சிபுரம், ஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மார்ச் 3 - 10ம் தேதி வரை திருப்பதி காமகோடி மடத்தில் பாதுகா மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார்.இதுகுறித்து, காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில், மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வடமாநிலங்களுக்கு யாத்திரை சென்று பக்தர்களை சந்தித்து ஆசியுரை வழங்கி வருகிறார்.ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் உள்ள சங்கர மடத்திற்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நாளை செல்கிறார். பிப். 25, 26ல், மகா நந்தீசுவர சுவாமி தேவஸ்தானத்தில் தங்குகிறார்.பிப்., 27, 28ல், ஆந்திர மாநிலம், அல்காதாவில் உள்ள காயத்ரி கோவிலிலும், பிப்., 29 முதல், மார்ச் 2 வரை ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள ஸ்ரீலலிதா பஞ்சயாத்யா கோவிலில் பூஜை நடத்துகிறார். தொடர்ந்து அங்குள்ள சின்மயா ஸ்ரீவித்யாஸ்ரமத்தில் சுக்ர வார பூஜை நடத்துகிறார்.மார்ச் 3 முதல் மார்ச் 10 வரை திருப்பதி காஞ்சி காமகோடி மடத்தில் பாதுகா மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கவுள்ளார்.மார்ச் 3ல், பரத்பர குரு ஆராதனை, மார்ச் 7ல் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவம், மார்ச் 8 ல் மஹா சிவராத்திரியையொட்டி பிரதோஷ பூஜை, மார்ச் 10ல் பரமேஸ்தி குரு ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
6 hour(s) ago
6 hour(s) ago