உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  திருப்போரூர் கோவில்களில் இன்று கார்த்திகை தீபம்

 திருப்போரூர் கோவில்களில் இன்று கார்த்திகை தீபம்

திருப்போரூர்: கார்த்திகை தீபத்தையொட்டி இன்று, திருப்போரூர் சுற்றுவட்டார கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, கிருத்திகையையொட்டி, கோவில் நடை அதிகாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுகின்றனர். சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து மாலையில், கோவிலின் முன்புறத்தில் அகல் விளக்குகளை ஏற்றி, சொக்கப்பனை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. திருப்போரூர் அய்யப்பன் கோவிலில், கார்த்திகை தீபத்தையொட்டி அய்யப்ப பக்தர்கள், குருசாமியிடம் மாலை அணியும் நிகழ்ச்சி நடக்கிறது. அதேபோல், புதுப்பாக்கம் வீர ஆஞ்சநேயர் மலைக்கோவில், திருப்போரூர் பிரணவ மலை கைலாசநாதர் கோவில், காட்டூர் தையல் நாயகி சமேத உத்ரவைத்ய லிங்கேஸ்வரர் கோவில், மேலையூர் நாகபரணீஸ்வரர் கோவில், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோவில், அகரம் கைலாசநாதர் கோவில்களில், கார்த்திகை தீப விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக, திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நேற்று இரவு பரணி உத்சவத்தில், கந்த பெருமான் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை