உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜல்லிக்கற்கள் கொட்டி பல மாதமாக சீரமைக்கப்படாத காயரம்பேடு சாலை

ஜல்லிக்கற்கள் கொட்டி பல மாதமாக சீரமைக்கப்படாத காயரம்பேடு சாலை

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணுபிரியா நகர் விரிவு - 2 பகுதியில், சாலைகள் சீரமைக்கும் பணிகள் துவங்கி, பல மாதங்கள் ஆகியும் பணிகள் நிறைவு பெறாததால், வாகன ஓட்டிகள், அப்பகுதிவாசிகள் சிரமம் அடைகின்றனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:விஷ்ணுபிரியா நகர் பகுதியில் உள்ள சாலைகள், மண் சாலையாக இருந்தன. மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக உள்ளதால், இருசக்கர வாகனத்தில் செல்வோர், மிகுந்த சிரமத்துடன் சென்று வந்தனர்.இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு முறையிட்டோம். அதன் அடிப்படையில், ஊராட்சி சார்பில், சில மாதங்களுக்கு முன், சாலையில் பள்ளம் தோண்டி, ஜல்லிக்கற்கள் கொட்டி சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டன.ஆனால், அப்பணி துவங்கிய வேகத்திலேயே நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. அதனால், அச்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர், கொட்டப்பட்டுள்ள ஜல்லிக்கற்களில் சறுக்கி விழுந்து, சிறுசிறு விபத்துகளில் ஏற்படுகின்றன.எனவே, பாதியில் நிற்கும் சாலை பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை