| ADDED : பிப் 16, 2024 12:19 AM
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் ராகுல், 19. அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பயின்று வருகிறார்.கடந்த டிசம்பர் மாதம், இவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், ராகுலின் லேப்டாப்பை திருடிச்சென்றார். இது குறித்து, சிசிடிவி' காட்சிகளை வைத்து, மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், ராகுல் பொத்தேரி ரயில் நிலையம் சென்றபோது, சிசிடிவி காட்சிகளில் இருந்த நபரை பார்த்துள்ளார்.பொதுமக்களின் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து, மறைமலை நகர் போலீசில் ஒப்படைத்தார். அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ராமநாதபுரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது, 40, என்பது தெரியவந்தது.மேலும், பொத்தேரியில் திருடிய லேப்டாப்களை, சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, சாகுல் அமீதை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.