மேலும் செய்திகள்
போக்குவரத்து விதிமுறை விழிப்புணர்வு 'ஸ்டிக்கர்'
30-Jan-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 162 பேர் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மறைமலை நகர், கூடுவாஞ்சேரி, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய பகுதியில், செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், ஜனவரியில் வாகன சோதனை நடத்தினர். இதில், இருசக்கர வாகனம், ஆட்டோக்கள், லாரி உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்தபோது, 162 ஓட்டுனர்கள் குடிபோதையில், வாகனம் ஓட்டியது தெரியவந்தது.அவர்களின், ஓட்டுனர் உரிமங்களை, மூன்று மாதங்களுக்கு, ரத்து செய்து, வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தர விட்டார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்கு தலா 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
30-Jan-2025