உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சிறுமி பலாத்கார வழக்கு இருவருக்கு ஆயுள்

சிறுமி பலாத்கார வழக்கு இருவருக்கு ஆயுள்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, பெற்றோரை இழந்து, அவரது பாட்டி வீட்டில் வசித்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஹரி, 28, கங்காதரன், 21 ஆகியோர், சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் கர்ப்பமான சிறுமிக்கு, 2021 டிச., 10ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.வாலிபர்கள் இருவரையும் கைது செய்து, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு தொடுத்தனர். வழக்கு விசாரணை செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றத்தில், நீதிபதி தமிழரசி முன்னிலையில் நடைபெற்றது. மரபணு பரிசோதனையில், சிறுமியின் குழந்தைக்கு தந்தை ஹரி என தெரியவந்தது.விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஹரி, கங்காதரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கட்ட தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி தமிழரசி நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ