உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூட்டை உடைத்து நகை திருட்டு

பூட்டை உடைத்து நகை திருட்டு

மதுராந்தகம்,:மதுராந்தகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரா முதுகரை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி காசியம்மாள், 50. இவர், நேற்று வீட்டை பூட்டிவிட்டு, வயலுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.பின், வேலை முடிந்து மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3 சவரன் தங்க நகை, வெள்ளி நகை மற்றும் 30,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ