| ADDED : பிப் 22, 2024 01:22 AM
மதுராந்தகம்:மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மதுராந்தகம் ஏரியில் துார் வாரும் பணி, பொதுமக்களிடம் மனுக்கள் பெறுதல் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், கலெக்டர் தலைமையில் நேற்று நடந்தது.இதில், மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்த கலெக்டர், மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். பின், கடந்த இரு தினங்களுக்கு முன், உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து 84 மனுக்கள் பெறப்பட்டன.இதில், தகுதி வாய்ந்த பயனாளிகள் 20 பேருக்கு, இலவச வீட்டு மனை பட்டாவை, நேற்று கலெக்டர் அருண்ராஜ் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சமயமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், வட்டாட்சியர் ராஜேஷ் வழங்கினர்.