உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாழ்வழுத்த மின் வினியோகம் பெருமாட்டுநல்லுாரில் அவதி

தாழ்வழுத்த மின் வினியோகம் பெருமாட்டுநல்லுாரில் அவதி

கூடுவாஞ்சேரி : பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, பாண்டூர் சுற்றுவட்டார பகுதிகளில், சில நாட்களாக குறைந்த அழுத்தம் கொண்ட மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதனால், அப்பகுதியில் வசிப்போர், இரவு நேரத்தில் மின்விசிறியை கூட பயன்படுத்த முடியாமல், துாக்கம் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர். அதேபோல், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபகரணங்களை பயன்படுத்த முடியாமல், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இப்பகுதியில், சில நாட்களாக குறைந்த அழுத்தம் கொண்ட மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, துாக்கம் இன்றி தவிக்கின்றனர்.சமையல் சாதனங்களை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, எங்கள் பகுதிக்கு சீரான மின் வினியோகம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ