உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேலப்பட்டு பெண் மாயம்

மேலப்பட்டு பெண் மாயம்

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த மேலப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயகுமார் மனைவி ஹரிப்ரியா, 27. கடந்த ஜன., மாதம், இவர்களுக்கு திருமணமானது.கடந்த 18ம் தேதி, தனக்கு வேலை கிடைத்திருப்பதாக, கணவரிடம் கூறிவிட்டு வெளியே சென்றவர், பின் வீடு திரும்பவில்லை. தாம்பரம் சேலையூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கும் செல்லவில்லை.அவரது மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திருக்கழுக்குன்றம் போலீசில், ஜெயகுமார் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, மாயமான இளம்பெண்ணை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ