உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போதை ஆசாமிகளால் வெட்டப்பட்டவர் உயிரிழப்பு

போதை ஆசாமிகளால் வெட்டப்பட்டவர் உயிரிழப்பு

பேசின்பாலம்:புளியந்தோப்பு, குமாரசாமி ராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 47. இவரது மனைவி, சோபா. இவர்களது வீட்டின் அருகே வசிக்கும் சிலர், தினமும் மது மற்றும் கஞ்சா போதையில் சாலையில் அரட்டை அடிப்பது வழக்கம். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.வழக்கம்போல, கடந்த வாரமும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர், சக்திவேல் வீட்டருகே சாலையில் அமர்ந்து மது அருந்தி, வம்புக்கு ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அட்டூழியம் தாங்க முடியாமல், சக்திவேல் அவர்களை தட்டிக் கேட்டு, அங்கிருந்து கண்டித்து அனுப்பியுள்ளார். இந்த நிலையில், கடந்த 3ம் தேதி டிமலஸ் சாலையில் உள்ள குமரன் டீ ஸ்டாலில், மாலை 7:00 மணியளவில் சக்திவேல் டீ குடிக்க சென்றார். அப்போது, முன்விரோதத்தில் இருந்த அந்த கும்பல், சக்திவேலிடம் தகராறு செய்து கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் அவரது முகம் மற்றும் தலையில் விழுந்த வெட்டில், மண்டை ஓடு பலத்த சேதமடைந்தது. அரசு பொது மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சக்திவேல், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.இதுதொடர்பாக பேசின்பாலம் காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, புளியந்தோப்பைச் சேர்ந்த சுண்டு' நவீன்குமார், 20, அஜித், 21, ராஜசேகரன், 24, தேள்' விக்கி என்கிற விக்னேஸ்வரன், 23, ஆகிய நான்கு பேரை கைது செய்திருந்தனர். சக்திவேல் உயிரிழந்த நிலையில், கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்