உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அதிகபட்ச விட்டம் கொண்ட குழாய் நெம்மேலி கடற்பகுதியில் அமைப்பு

அதிகபட்ச விட்டம் கொண்ட குழாய் நெம்மேலி கடற்பகுதியில் அமைப்பு

மாமல்லபுரம்:சர்வதேச நாடுகளில், கச்சா எண்ணெய், எரிவாயு, தண்ணீர் உள்ளிட்டவற்றின் வினியோகத்திற்காக, கடலில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.குறைவான நீளம், விட்டம் அளவில், தனித்தனி குழாயாக தயாரிக்கப்பட்டு, தேவைக்கேற்ப இணைத்து பொருத்தப்படும். அத்தகைய குழாய்கள், இந்திய கடலிலும் பயன்பாட்டில் உள்ளன.இந்நிலையில், நாட்டில் அதிகபட்ச விட்டம் அளவாக, 7.5 அடி (-2,250 மி.மீ.,)- கொண்ட குழாய், சென்னை கடலில் அமைக்கப்பட்டுள்ளது.சென்னை அடுத்த நெம்மேலியில், பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின்கீழ், தினசரி கடல்நீரிலிருந்து, 15 கோடி குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலை, 1,516.82 கோடி ரூபாய் மதிப்பில், தற்போது அமைக்கப்பட்டுள்ளது.கடந்த பிப்., 24ம் தேதி முதல்வர் ஸ்டாலின், அதை இயக்கி குடிநீர் உற்பத்தியை துவக்கி வைத்தார். இந்த ஆலையில், நாட்டிலேயே அதிகபட்ச விட்டம் கொண்ட கடல்நீரை உள்வாங்கும் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மாதிரி, ஆலை வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பெருநகர் குடிநீர் வாரிய பொறியாளர்ஒருவர் கூறியதாவது:இந்திய கடற்பகுதியில், அதிகபட்ச விட்ட அளவு கொண்ட குழாயை, இங்கு தான் அமைத்துள்ளோம். ஆசியாவிலேயே அதிகபட்ச விட்டம் கொண்ட குழாயாகவும் இருக்கலாம்.கடற்கரையிலிருந்து, 1,035 மீட்டர் நீளத்திற்கு, கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் ஆழத்தில், இக்குழாய் அமைக்கப்பட்டுள்ளது.கடல்நீரை உந்தி அனுப்பும் மோட்டார் அமைப்பும் கிடையாது. நீரின் அழுத்தத்தில், தாமாக உந்தும் வகையில் இக்குழாய் பொருத்தப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ