உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் அன்பரசன் ஆஜர்

 சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் அன்பரசன் ஆஜர்

செங்கல்பட்டு : வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் அன்பரசன், செங்கல்பட்டு கோர்ட்டில், நேற்று ஆஜரானார். தி.மு.க., ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக, 2006 ஜூன் 1 முதல் 2011 மார்ச் 31ம் தேதி வரை, அன்பரசன் இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் அன்பரசன், அவரது மனைவி தமிழ்ச்செல்வி, மகன் தமிழ்மாறன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு, செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு, முதன்மை மாவட்ட நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆஜரானார். இதில், அவரது மனைவி தமிழ்ச்செல்வி, மகன் தமிழ்மாறன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர்களது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து இவ்வழக்கை, வரும் 2026 ஜன., 6ம் தேதிக்கு, நீதிபதி சந்திரசேகர் ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை