உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சேதமடைந்துள்ள நல்லுார் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

 சேதமடைந்துள்ள நல்லுார் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

செய்யூர்:சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ள நல்லுார் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யூர் அடுத்த இரும்பேடு பகுதியில் நல்லுார் - வில்லிப்பாக்கம் இடையே செல்லும், 17 கி.மீ., துார மாநில நெடுஞ்சாலை உள்ளது. வாழப்பட்டு, இரும்பேடு, ஜமீன்பூதுார் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தினமும் இந்த சாலையை பயன்படுத்தி பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகின்றனர். கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்காக, கடந்த 6 மாதங்களுக்கு முன், வாழப்பட்டு ஏரியில் இருந்து லாரிகளில் மண் ஏற்றிச் செல்லப்பட்டது. அதிக பாரம் ஏற்றிச் செ ன்றதால், சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, சாலை சேதமடைந்துள்ளது. இதனால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலை வளைவுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கி விபத்துக்கு உள்ளாகின்றனர். மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நல்லுார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி