உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நெல் உலர்த்தும் விவசாயிகளால் வாகன ஓட்டிகள் அவதி

நெல் உலர்த்தும் விவசாயிகளால் வாகன ஓட்டிகள் அவதி

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே சாலையில் நெல் உலர்த்தும் விவசாயிகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மதுராந்தகம் அருகே பூதுார் பகுதியில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது, அறுவடை செய்யப்பட்டு, நிலத்தில் இருந்து டிராக்டர் வாகனங்கள் மூலம் கொண்டு வரும் நெல்களை, உலர வைப்பதற்கு கிராமப் பகுதியில் போதிய இடம் இல்லாததால், மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில், ஆக்கிரமித்து நெல்களை கொட்டி உலர வைக்கின்றனர். இதனால், விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால், அந்த வழியை பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். விவசாயிகளின் நெல்களை உலர வைப்பதற்கு கூடுதலாக, நெற்களம் அமைத்து தர கோரி, ஊராட்சி நிர்வாகத்தின் மூலம், மாவட்ட நிர்வாகத்தினருக்கு, விவசாயிகள் மனு அளித்துள்ளனர். எனவே, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி