உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வடமாநில வாலிபரிடம் மர்ம நபர் கைவரிசை

வடமாநில வாலிபரிடம் மர்ம நபர் கைவரிசை

சூணாம்பேடு:அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் நபி குசைன், 30; கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க திட்டத்தில் கட்டுமான வேலை செய்து வருகிறார்.தேன்பாக்கம் பகுதியில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால், அதே பகுதியில் டெண்ட் அமைத்து, பணிபுரிந்து வருகின்றனர். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு துாங்கிக் கொண்டிருந்த போது, நபி குசைனின் தலையில் கட்டையால் தாக்கிய மர்மநபர்கள், மொபைல் போன் மற்றும் 5,000 ரூபாயை திருடிவிட்டு தப்பியோடினர்.இதுகுறித்து நபி குசைன் சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை