உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் தமிழக போலீசார் அசத்தல்

 தேசிய ஜூடோ சாம்பியன்ஷிப் தமிழக போலீசார் அசத்தல்

சென்னை: ஜம்மு - காஷ்மீரில் நடந்த தேசிய ஜூடோ- சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக போலீசார் அசத்தலாக விளையாடி பதக்கங்கள் வென்றனர். ஜம்மு - காஷ்மீர் காவல் துறை மற்றும் அகில இந்திய காவல் துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 10வது தேசிய காவல் ஜூடோ -கிளஸ்டர்- - 2025 போட்டி, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நடந்தது. ஜூடோ, டேக்வாண்டோ, பென்காக் சிலாட் மற்றும் கராத்தே உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. இதில், 38 மாநில காவல் படைகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய ஆயுதப்படை அணிகள் உட்பட 1,600-க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். இதில், தமிழக போலீஸ் ஜூடோ -கிளஸ்டர் அணியில் 103 வீரர்கள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த கடுமையான போட்டிகளில், தமிழக வீரர்கள் 18 பதக்கங்களை வென்று அசத்தினர். பதக்கம் வென்று அசத்திய போலீசாரை, தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) வெங்கடராமன், நேற்று நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி