உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தேசிய தொழிற்பழகுனர் நாளை பயிற்சி முகாம்

தேசிய தொழிற்பழகுனர் நாளை பயிற்சி முகாம்

செங்கல்பட்டு : பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் பயிற்சி முகாம், நாளை நடக்கிறது.இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு, பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் பயிற்சி முகாம், செங்கல்பட்டு தொழிற்பயிற்சி நிலையத்தில், நாளை நடைபெற உள்ளது.இம்முகாமில், ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்று, பல்வேறு தொழிற்பிரிவை சார்ந்த பயிற்சியாளர்கள் பங்கேற்று, பயிற்சி வழங்க உள்ளனர்.மேலும் விபரங்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனரை நேரிலோ அல்லது gmail.comஎன்ற மின்னல்சல் மற்றும் 044- 2742 6554 - 63790 90205 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளாலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்