உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாம்பாக்கம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு

மாம்பாக்கம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை திறப்பு

சித்தாமூர், மாம்பாக்கம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை நேற்று திறக்கப்பட்டது. சித்தாமூர் அருகே மாம்பாக்கம் ஊராட்சிபகுதியில் செயல்படும் ரேஷன் கடையால் 163 குடும்பத்தினர் பயனடைகின்றனர். பல ஆண்டுகளாக ரேஷன்கடைக்கு நிரந்தர கட்டடம் இல்லாததால், தனியார் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. ரேஷன் கடைக்கு நிரந்தர கட்டடம் அமைக்க வேண்டுமென கிராம மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், 2023-24ம் ஆண்டு செய்யூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9.4 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை செய்யூர் வி.சி., எம்.எல்.ஏ., பாபு நேற்று திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி