உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பழவேற்காடு சரணாலய எல்லை வரையறுப்பதில் விதிமீறல் இல்லை தீர்ப்பாயத்தில் கலெக்டர் அறிக்கை

 பழவேற்காடு சரணாலய எல்லை வரையறுப்பதில் விதிமீறல் இல்லை தீர்ப்பாயத்தில் கலெக்டர் அறிக்கை

சென்னை: 'பழவேற்காடு பறவைகள் சரணாலய எல்லையை வரையறுப்பதில், விதிமீறல் எதுவும் இல்லை' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், திருவள்ளூர் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் பறவைகள் சரணாலயத்தை ஒட்டிய பகுதிகளை, 'எக்கோ சென்சிட்டிவ் ஸோன்' எனும் சூழல் முக்கியத்துவ பகுதியாக வரையறுக்க, மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, பழவேற்காடு பறவைகள் சரணாலய எல்லைக்குள் தங்கள் கிராமங்களைச் சேர்க்க, பல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு, சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை வரையறுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பல கிராமங்கள் விடுவிக்கப்பட்டதால், அங்கு கட்டுமானங்கள் அதிகரித்து, பழவேற்காடு சதுப்பு நிலம் மற்றும் சரணாலயத்திற்கு பாதிப்பு ஏற்படும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, திருவள்ளூர் கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கை: பழவேற்காடு ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பழவேற்காடு, பாக்கம், சிறுளப்பாக்கம், அண்ணாமலைச்சேரி, சுண்ணாம்புகுளம் உள்ளிட்ட 13 கிராமங்கள் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் என அழைக்கப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. பழவேற்காடு சரணாலயத்தில் இணைக்கப்பட்ட கிராமங்களில், நிலங்களை விடுவிப்பது தொடர்பாக, அரசு அறிவிப்பு வெளியிட்டது. வனத்துறை பரிந்துரை அடிப்படையில், இங்கு தனியார் பட்டா நிலங்கள் குறித்து உரிமை கோருவோர், அதற்கான ஆதாரத்துடன் தனித்தனியாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த விண்ணப்பங்கள், வருவாய் மற்றும் வனத்துறை விதிகளுக்கு உட்பட்டு பரிசீலிக்கப்படும். அதன் அடிப்படையில் பழவேற்காடு ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவிப்பதற்கான முன்மொழிவு அரசுக்கு அனுப்பப்படும். சரணாலய எல்லையை வரையறுப்பதில் எந்த விதிமீறலும் இல்லை. பழவேற்காடு ஏரி மற்றும் அதன் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்கவும்தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை