உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குளத்தில் மூழ்கி முதியவர் பலி

குளத்தில் மூழ்கி முதியவர் பலி

சதுரங்கப்பட்டினம்: கல்பாக்கம் அடுத்த, வாயலுார் பெரிய காலனியைச் சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் தம்பிதுரை, 60; பரோட்டா மாஸ்டர். கடந்த ஜன., 25ம் தேதி பணிக்கு செல்வதாக கூறி, வீட்டிலிருந்து புறப்பட்டார். பின்னர் வீடு திரும்பவில்லை. அங்கேயே தங்கியிருக்கலாம் எனக் கருதி, குடும்பத்தினர் தேடவில்லை.இந்நிலையில், நேற்று காலை 9:00 மணிக்கு, வாயலுார் சேரியம்மன் கோவில் குளத்தில், முதியவர் ஒருவரின் உடல் மிதப்பதாக, சதுரங்கப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், குளத்தில் மூழ்கி இறந்தது தம்பிதுரை என தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் மணிகண்டன் அளித்த புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி