உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இடமாற்றத்தை கைவிடக்கோரி ஊராட்சி செயலர்கள் மறியல்

இடமாற்றத்தை கைவிடக்கோரி ஊராட்சி செயலர்கள் மறியல்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், 54 ஊராட்சிப் பகுதிகள் உள்ளன. அவற்றில் பணியாற்றும், 52 ஊராட்சி செயலர்களை, கிராம ஊராட்சி -- வட்டார வளர்ச்சி அலுவலர் லாவண்யா, தற்போது வேறு ஊராட்சிக்கு இடம் மாற்றி உத்தரவிட்டார்.இதனால் அதிருப்தியடைந்த செயலர்கள், ஊராட்சித் தலைவர்களுடன், நேற்று அவரை சந்தித்து, இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தினர்.ஆனால், வட்டார வளர்ச்சி அலுவலர் ஏற்க மறுத்தார். அதனால் ஆவேசமடைந்த ஊராட்சி செயலர்கள், அலுவலகம் எதிரில், செங்கல்பட்டு சாலையில், 12:30 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர்.இதையறிந்து சென்ற திருக்கழுக்குன்றம் போலீசார், இருதரப்பினரிடமும் பேசினர். நாளை முடிவெடுக்கலாம் என, அலுவலர் தெரிவித்த நிலையில், 20 நிமிட மறியலை கைவிட்டு கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை