மேலும் செய்திகள்
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் அன்பரசன் ஆஜர்
3 minutes ago
மாமல்லை நகராட்சிக்கு ஊழியர்கள் நியமனம்
4 minutes ago
திருப்போரூர் கோவில்களில் இன்று கார்த்திகை தீபம்
7 minutes ago
சாலையில் தேங்கிய மழைநீர் அகற்றம்
7 minutes ago
சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அருகே, மகேந்திரா சிட்டியில், அரசு விரைவு சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, விபத்தில் சிக்கியது. இதில் நல்வாய்ப்பாக, பயணியர் காயமின்றி தப்பினர். திண்டுக்கலில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் நோக்கி, 10 பயணியருடன் நேற்று காலை, அரசு விரைவு சொகுசு பேருந்து வந்து கொண்டிருந்தது. காலை 7:45 மணியளவில், ஜி.எஸ்.டி., சாலையில், மகேந்திரா சிட்டி 'சிக்னல்' அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் வலதுபுறம் உள்ள மையத் தடுப்பை கடந்து, அங்கிருந்த மின் கம்பத்தில் மோதியது. அத்துடன், செங்கல்பட்டு மார்க்க சாலையில் சென்று, சாலையோர தடுப்பில் மோதி நின்றது. இதில் நல்வாய்ப்பாக, பயணியர் அனைவரும் காயமின்றி தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், 'கிரேன்' இயந்திரம் மூலமாக பேருந்தை மீட்டு, போக்குவரத்தை சரி செய்தனர். விசாரணையில், பேருந்தில் 'பிரேக்' சரியாக பிடிக்காததால், விபத்து ஏற்பட்டது தெரிந்தது. இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக, அப்பகுதியில் சற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
3 minutes ago
4 minutes ago
7 minutes ago
7 minutes ago