| ADDED : ஜன 12, 2024 11:19 PM
மேல்மருவத்துார்:சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக, மருத்துவமனையில் இருந்து அளிக்கப்பட்ட தகவலின்படி, அச்சிறுபாக்கத்தைச் சேர்ந்த நபர் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மேல்மருவத்துார் அனைத்து மகளிர் போலீசார் கூறியதாவது:அச்சிறுபாக்கத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, அவரது சகோதரி வீட்டிற்கு கடந்தாண்டு செப்டம்பரில் சென்று வந்து உள்ளார்.அப்போது, காவியாவின் கணவர் ஜோஸ்பிரதாப், 33, என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின், மீண்டும் அக்டோபர் மாதத்தில் ஒரு முறை பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், சிறுமி கர்ப்பமானார்.இதுகுறித்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருந்து, மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அளிக்கப்பட்ட தகவலின்படி, போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.