உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அஞ்சல் துறை ஹாக்கி; தமிழக அணி வெற்றி

அஞ்சல் துறை ஹாக்கி; தமிழக அணி வெற்றி

சென்னை : அகில இந்திய அஞ்சல் துறையினருக்கான ஹாக்கி போட்டியில், தமிழக அணி முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் துவக்கியது, உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின், 35வது அகில இந்திய அஞ்சல் துறை ஹாக்கி போட்டி, எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் அரங்கில் நேற்று துவங்கியது.இதில் தமிழகம், ஒடிசா, பஞ்சாப், மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய ஐந்து அணிகள், 'லீக்' முறையில் மோதுகின்றன.நேற்று காலை துவங்கிய போட்டியை, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் ஆடம் ஆன்டனி, முதன்மை அஞ்சல் துறை தலைவர் ஸ்ரீதேவி உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.தொடர்ந்து நடந்த முதல் ஆட்டத்தில் கர்நாடகா அணி, 5 - 3 என்ற கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில், தமிழகம் மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதின. இதில், 4 - 0 என்ற கணக்கில் தமிழக அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.அணியின் வீரர் நவீன்குமார் இரண்டு கோல் அடித்து, ஆட்டநாயகன் விருதை பெற்றார். தினேஷ், பிரேம்குமார் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.போட்டிகள் தொடர்ந்து 16ம் தேதி வரை நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை