உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

 டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

மறைமலை நகர்: மறைமலை நகரில் குடியிருப்புகளுக்கு இடையே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி, பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மறைமலை நகர் நகராட்சி, பாவேந்தர் சாலையை சுற்றி, 2,000 த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக கட்டடங்கள், கோவில்கள், சர்சுகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பரில், புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. குடிமகன்களால் பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் இந்த பகுதியை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் பலர், மதுபோதையில் மயங்கி விழுந்து கிடக்கின்றனர். எனவே, டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என, பா.ம.க., சார்பில் நேற்று காலை, பாவேந்தர் சாலை சந்திப்பில், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பா.ம.க.,வினர், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை