உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோவில்களில் பொது விருந்து

கோவில்களில் பொது விருந்து

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளில் பொது விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, அண்ணாதுரை நினைவு நாளான நேற்று சென்னை மற்றும் புறநகரில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 33 கோவில்களில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து நடந்தது.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவிலில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி., ஏ.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் பல்வேறு கோவிலில் நடந்த பொது விருந்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை