அண்ணா நகர்:மது அருந்தி வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாய், 'ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டினால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.அதேபோல், போக்குவரத்து விதிமீறலில் ஈடுவோருக்கு, கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக அபராதம் விதித்து, போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில், அண்ணா நகர், ஆறாவது அவென்யூவில் உள்ள தனியார் ஹோட்டல் வந்த பெண் ஒருவர், உணவு தொடர்பாக, 'புட் ரிவ்யூ' செய்து, அதை வீடியோவாக, சமூக வலைதளமான 'இன்ஸ்டா'வில் பதிவிட்டுள்ளார்.வீடியோவில், 'ஹெல்மெட்' அணியாமல், ஸ்கூட்டரில் உணவகத்திற்கு செல்வது போல் பதிவாகி இருந்தது.இந்த வீடியோவை, வாகனத்தின் பதிவு எண்ணுடன் குறிப்பிட்டு, விதிமீறலில் ஈடுபடுவதாக சென்னை போலீசாருக்கு சமூக வலைதளத்தில் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து, அண்ணா நகர் போலீசார், அந்த பெண்ணின் வாகனத்தின் மீது, 1,000 ரூபாய் அபாரதம் விதித்தனர். பெண்ணிடம் புகைப்படத்துடன், அபராதம் விதித்தது குறித்தும் போலீசார் வலைதளத்தில் பதிவிட்டனர்.