உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய கல்குவாரிக்கு அபராதம்

 இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்திய கல்குவாரிக்கு அபராதம்

சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த தொன்னாடு கிராமத்தில் 10 ஆண்டுகளாக தனியார் கல்குவாரி செயல்படுகிறது. கல்குவாரியில் முறைகேடாக மின் திருட்டு நடப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், நேற்று முன்தினம் மின் வாரிய அமலாக்க பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் வயல்வெளிக்கு பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை முறைகேடாக, கல்குவாரி பயன்பாட்டிற்கு பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து, கல்குவாரி நிறுவனத்திற்கு 4.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி