மேலும் செய்திகள்
95க்கு 95 மனுக்களுக்கு தீர்வு
14-Sep-2025
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆறு தாலுகாக்களில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம் போன்ற திருத்தங்கள் செய்ய, நாளை சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாக்களில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மறறும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம் நடக்கிறது. கீழ்க்கண்ட கிராமங்களில், ரேஷன் கடைகளில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம், நாளை நடக்கிறது. இதில், தகுந்த ஆவணங்கள் கொடுத்து, கார்டுதாரர்கள் தங்களது ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார் களையும், இந்த முகாமில் பதிவு செய்யலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் இடங்கள் தாலுகா கிராமம் செங்கல்பட்டு கொளத்துார் மதுராந்தகம் அரையப்பாக்கம் செய்யூர் இடைக்கழிநாடு திருக்கழுக்குன்றம் மாமல்லபுரம் அண்ணாநகர் திருப்போரூர் தண்டலம் வண்டலுார் மேலகோட்டையூர்
14-Sep-2025