உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரேஷன் கார்டில் பெயர் திருத்த முகாம்

ரேஷன் கார்டில் பெயர் திருத்த முகாம்

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே மாம்பாக்கம் பகுதியில், நேற்று, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகாம் நடந்தது.நேற்று, மதுராந்தகம் தாலுக்காவில், மாம்பாக்கம் அரசு பள்ளி கட்டடத்தில் நடந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், அட்டை புதுப்பித்தல், புகைப்படம் பதிவேற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட 52 மனுக்கள் பெறப்பட்டது. மதுராந்தகம் வட்டாச்சியர் கணேசன் துவக்கி வைத்தார். வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் அலுவலக ஊழியர்கள் பணிகளை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை