உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கட்டி முடித்து 10 ஆண்டுகளாகியும் திறக்காமல் வீணாகும் ரேஷன் கடை

கட்டி முடித்து 10 ஆண்டுகளாகியும் திறக்காமல் வீணாகும் ரேஷன் கடை

அச்சிறுபாக்கம், களத்துார் கிராமத்தில், கட்டப்பட்டு 10 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ள ரேஷன் கடையை, பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அச்சிறுபாக்கம் ஒன்றியம், களத்துார் ஊராட்சியில் உள்ள ஜே.ஜே.நகரில், ரேஷன் கடை அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, கரசங்கால்- - கொங்கரை சாலையில், 2015 - 2016ல், மதுராந்தகம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6.50 லட்சம் ரூபாயில், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை கட்டி முடித்து 10 ஆண்டுகளான நிலையில், இன்னும் திறக்கப்படாததால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தற்போது இந்த கிராமத்தினர், 2 கி.மீ., துாரத்தில் உள்ள களத்துார் கிராமத்தில் செயல்படும் ரேஷன் கடைக்குச் சென்று, பொருட்கள் வாங்கி வருகின்றனர். துாரம் அதிகமாக உள்ளதால், முதியவர்கள் மற்றும் பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே, களத்துாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ